KPY பாலாவுக்கு விரைவில் கல்யாணம்! 'இதுதான் முகூர்த்த நேரம்' அவரே சொன்ன சூப்பர் அப்டேட்…
சின்னத்திரை உலகின் பிரபலமாக வலம் வரும் KPY பாலா, தனது திருமணம் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன்முதலாக பிரபலமானவர் தான் பாலா. தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடைய நகைச்சுவை திறமையை மக்கள் அறிய பல போட்டிகளில் கலந்து கொண்டார்.
கலக்கப்போவது யாரு ஆறாவது சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற பாலா தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வந்தார். அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அதில் கோமாளியாக நடித்து மேலும் மக்களின் மொத்த அன்பையும் பெற்றார் .
நடிகர் பாலா, கடந்த சில மாதங்களாக ஏழை எளியோருக்கு உதவி செய்வதை வழக்காக கொண்டிருக்கிறார். தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்த போதும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவியருக்கு பண உதவி தேவைப்படும் போதும் அவர்களுக்காக உதவி செய்கிறார் பாலா. இவரது செயல், பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலா, திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதற்கு முன்பு சம்பாதிப்பதை இல்லாதவர்களுக்கு செய்து வந்த நிலையில் தற்போது உதவி செய்வதற்காகவே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளதாகவும், என்னால் முடிந்தவரை செய்து கொண்டே இருப்பேன் என அவர் தெரிவித்தார்.
எதிர்காலத் திட்டம் முழுவதுமே தன்னால் இயன்றவரை அடுத்தவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரிவித்த அவர் உங்களுக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு திடீரென இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டீர்களே காலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் என்னுடைய திருமணம் ஆனால் எப்பொழுது என்று தேதியை பின்பு அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.