For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு..!! இத்தனை வருடங்கள் நடித்தும் கூட இவ்வளவு தானா..?

The information about actress Anjali's net worth has been published in a Telugu website.
04:06 PM Oct 05, 2024 IST | Chella
நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு     இத்தனை வருடங்கள் நடித்தும் கூட இவ்வளவு தானா
Advertisement

நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தெலுங்கு இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்னதான் திறமையாக நடித்தாலும் அது ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் அவர்களுக்கு கை கொடுக்கிறது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போன சில நடிகைகள் கவர்ச்சி களத்தில் குதித்து விடுகின்றனர். அந்த வகையில் நன்றாக தமிழ் பேசும் நடிகை, திறமையாக நடிக்கக் கூடியவர், ராசியான நடிகை என பெயர் வாங்கியவர்தான் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். நடுவில் நடிகர் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் தாக்குப்பிடித்து நடித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு உடல் எடை கூடியதால் அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால், கிளாமர் பக்கம் சென்றார். அதுவும் ஒரு சில படங்களில் தான் நடித்தார். பின்பு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அஞ்சலியின் கிராஃப்ட் குறைய தொடங்கியது. சின்ன கேப் எடுத்துக் கொண்டவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் களத்தில் குதித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு படத்தில் இவர் போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனது.

இந்நிலையில், நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் பிரபல தெலுங்கு இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கிறதாம். பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கும் அவர், தான் சம்பாதிக்கும் பணத்தை தொழிலிலும் முதலீடு செய்திருப்பதாகவும், அதன் மூலம் வருமானம் ஒரு பக்கம் வருகிறதென்றும் கூறப்படுகிறது.

Read More : கொத்தனாருடன் கள்ளக்காதல்..!! முதல் காதலன் வேலைக்கு சென்றதும் 2-வது காதலனுடன் உல்லாசம்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

Tags :
Advertisement