நள்ளிரவில் பரபரத்த கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்..!! கையில் லத்தியை எடுத்த போலீஸ்..!! நடந்தது என்ன..?
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டன. அரசு விரைவு பேருந்துகள் முதல் ஆம்னி பேருந்து வரை என அனைத்து பேருந்துகளே தற்போது கோயம்பேடு வரை தான் இயக்கப்படுகின்றன. இதனால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே கோயம்பேட்டில் இயங்கி வருகின்றன.
இந்த பேருந்துகளும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை. பஸ் ஸ்டாண்டு முழுவதும் பயணிகள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை. சமூக விரோதிகள், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக 2 மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. அதாவது, சிலர் குற்ற சம்பவங்களை செய்துவிட்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் பதுங்கி கொள்வதாகவும், மதுப்பிரியர்களும் இங்கேயே குடித்து கும்மாளமிடுவதாகவும் புகார் கிளம்பியது.
இதனை தடுக்க காவல்துறை தரப்பில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரவு தங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பஸ் ஸ்டாண்டில் தூங்கிவிட்டு, மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பி பணிக்குச் சென்றுவிடுவார்கள். பிறகு பணிமுடிந்து மறுபடியும் இரவு இங்கு வந்து தூங்குவார்கள். இப்படி இங்கு வந்து தூங்குபவர்களுக்கு நிரந்தர வீடு, வாசல் எதுவும் கிடையாது. இவர்களில் பெரும்பாலானோர் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் தான்.
இப்படித்தான், நேற்றிரவும் இவர்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த போலீசார், திடீரென அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். அங்கிருந்த அனைவரையுமே நள்ளிரவு என்றும் பாராமல் போலீஸ் விரட்டியுள்ளது. இந்த திடீர் தாக்குதலால், சிலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளித்துபோய், பேருந்து நிலையத்திலேயே மறியலில் ஈடுபட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More : சூடுபிடிக்கும் திருப்பதி லட்டு விவகாரம்..!! மாட்டு கொழுப்பை கலந்தது எப்படி..? தயாரிப்பது யார் தெரியுமா..?