உடல் எடையை அசால்டாக குறைக்கும் கொத்தவரங்காய்..!! கர்ப்பிணி பெண்கள் மறக்காம சாப்பிடுங்க..!! ஏராளமான நன்மைகள் கொட்டிக் கிடக்குது..!!
காய்கறிகள் உடல் நலத்திலும் நம் உடலின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும், கொத்தவரங்காய் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை தருகிறது. இதனை உணவாக எடுத்துக் கொள்வதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதோடு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக செயல்படுகிறது.
கொத்தவரங்காயில் வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், மாங்கனிசு மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. மேலும், இவற்றில் நார்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. கொத்தவரங்காய் போலிக் அமிலம் நிறைந்த உணவாகும். இவற்றில் பைடோ கெமிக்கல்களும் நிறைந்து இருக்கிறது. கொத்தவரங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவாகும். இவற்றில் இருக்கக் கூடிய போலிக் அமிலம் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்த ஓட்டம் சீர்படுத்தப்படுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய பைடோ கெமிக்கல்கள் உடலில் ரத்த ஓட்டத்தினை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் உடல் எடை குறைப்பிலும் கொத்தவரங்காயின் பங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது.
இவை குடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கழிவுகளை நீக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. கொத்தவரங்காயில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய அதிகமான இரும்புச்சத்து உடலுக்கு இரத்த சோகை ஏற்படாமல் பாதுகாப்பதோடு ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.