For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ. 23000 சம்பளம்.. தென்காசியில் அரசு மருத்துவமனையில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?

Tenkasi District Head Government Hospital job notification has been released.
06:16 PM Jan 21, 2025 IST | Mari Thangam
ரூ  23000 சம்பளம்   தென்காசியில் அரசு மருத்துவமனையில் வேலை     விண்ணப்பிக்க ரெடியா
Advertisement

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசியில் தேசிய நலவாழ்வுக் குழுமம்- TN-RIGHTS Projects திட்டத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பதவிகளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisement

பணியிட விவரம் : நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் (Special Educator for Behavioural Therapy), தொழிற்சார் சிகிச்சையாளர் (Occupational Therapist), சமூக சேவகர் (Social Worker) ஆகிய மூன்று பணியிடங்களுக்கும் ஒரு நபர் விதம் மூன்று காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி : நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் Special Education in Intellectual Disability பிரிவில் பெற்று இருக்க வேண்டியது அவசியம்.தொழிற்சார் சிகிச்சையாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலை Occupations Therapy பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.சமூக சேவகர் காலிப்பணியிடத்திற்கு Master of Social work (MSW) முடித்திருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு : 16.12.2024 இன் படி 40 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

சம்பளம் : மாத ஊதியமாக 23,000 இருந்து 23,800 வரை வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட (https://tenkasi.nic.in/notice_category/recruitment/) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

முகவரி : செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்-627811.

Read more ; சூப்பர்…! PM Kissan உதவித்தொகை… வரும் 24-ம் தேதி விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்…!

Tags :
Advertisement