For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொங்கு மண்டலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை மன்னிக்காது...! வானதி ஸ்ரீனிவாசன் தாக்கு

Kongu Zone Chief Minister M.K.Stalin will not be forgiven.
07:42 AM Sep 15, 2024 IST | Vignesh
கொங்கு மண்டலம் முதல்வர் மு க ஸ்டாலினை மன்னிக்காது     வானதி ஸ்ரீனிவாசன் தாக்கு
Advertisement

கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "ஜி.எஸ்.டி. குறித்த தொழிமுனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று" என்று கூறியிருக்கிறார். கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து அதை காப்பற்றவே திருமதி.நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு திமுக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்னையை திசைதிருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

திமுக அரசின் அபரிமிதமான மின் கட்டண உயர்வாலும், சொத்துவரி, பதிவு கட்டண உயர்வாலும் 30 சதவீத குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, கோவையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற முறையில், மத்திய நிதியமைச்சருடன், தொழில்முனைவோர்கள் நேரடியாக சந்திக்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன். தொழில்முனோர்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த கோரிக்கைகள், ஆலோசனைகளை மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் பொறுமையுடன் கேட்டு பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சி பெரும் வெற்றிபெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்போது நடந்த சாதாரண நிகழ்வை, பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேட தி.மு.கவும், அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் மன்னிக்காது என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement