For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கடைக்கு செல்லும் முன் விலையை தெரிஞ்சிக்கோங்க..!! குவாட்டர், பீர் எவ்வளவு தெரியுமா.? இன்று முதல் புதிய விலை..!!

08:15 AM Feb 01, 2024 IST | 1newsnationuser6
கடைக்கு செல்லும் முன் விலையை தெரிஞ்சிக்கோங்க     குவாட்டர்  பீர் எவ்வளவு தெரியுமா   இன்று முதல் புதிய விலை
Advertisement

தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை மதுபானங்கள், 49 நடுத்தர வகை மதுபானங்கள், 128 பிரீமியம் வகை பிராண்ட் மதுபானங்கள், 35 வகையான பீர், 13 வகையான ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கின்றன.

Advertisement

இந்நிலையில், இன்று முதல் மதுபாட்டில்களின் மீதான விலை உயர்வை அமல்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 180 மி.லி கொண்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375மி.லி., 750மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் 500மி.லி., 325மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாக அறிவிப்பின் படி, சாதாரண, நடுத்தர ரக மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.10-ம், ஆஃப் ரூ.20-ம், புல் பாட்டில் ரூ.40-ம் உயருகிறது.

இதே போல், உயர் ரக மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.20-ம், ஆஃப்க்கு ரூ.40-ம், ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80-ம் உயரும். ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவது தொடரும் நிலையில், மதுபானங்கள் விலை உயர்வு குடிமகன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு மூலம் 2,000 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement