முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Kachchatheevu | கச்சத்தீவு + ராமநாதபுரம் மன்னர்..!! அவர்களுக்கே சொந்தம்..!! அமைச்சர் சொன்னதை கவனிச்சீங்களா..?

05:27 PM Apr 04, 2024 IST | Chella
Advertisement

"ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும், பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து பேசி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி உறுதியளித்தார்.

Advertisement

அரசியல் களத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மாறி மாறி குறைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "பிரதமர் மோடிக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதாக தெரிகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, கச்சத்தீவு குறித்து வாய் திறக்காமல் தற்போது தேர்தலுக்காக வாய் திறந்துள்ளார்.

அண்ணாமலை கூறுவது போல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கச்சத்தீவை அளிப்பதற்கு எந்த ஒப்புதலும் தரவில்லை. அவர் ஒரு ராஜதந்திரி. இந்த பிரச்சனையை 2 ஆண்டுகள் ஒத்தி போட முடியுமா என்று தான் கேட்டாரே தவிர ஒரு போதும் விட்டு கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை. கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு தான் சொந்தம். அவருடைய வாரிசுகள் இதுவரை சொந்தம் கொண்டாடவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மன்னர் வாரிசு வழக்கு தொடர்ந்து, கச்சத்தீவு எங்களுக்குதான் சொந்தம் என்று கூறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டு.

ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும், பாதிக்கப்பட்ட மீனவர் சமுதாயங்களையும் சந்தித்து பேசி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், கச்சத்தீவை மீட்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் கச்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்க்கட்சிகளை குற்றம் சாட்டுகின்றனர்" என்றார்.

Read More : இஸ்ரேல் அட்டாக்..!! காஸாவில் இதுவரை 33,000 பேர் உயிரிழப்பு..!! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!!

Advertisement
Next Article