For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொங்கலுக்கு முன் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்.! பொதுமக்கள் மகிழ்ச்சி.!

05:23 AM Dec 26, 2023 IST | 1newsnationuser4
பொங்கலுக்கு முன் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்   பொதுமக்கள் மகிழ்ச்சி
Advertisement

புது வருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. புது வருடம் பிறந்து விட்டால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி விடுவார்கள். மேலும் அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையின் போது தான் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பு தமிழக மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement

சென்னை நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் முழுவதுமாக நிறைவடைந்து வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். இந்தப் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம் மற்றும் பூங்கா பணிகள் மீதி இருப்பதாகவும் அந்தப் பணிகளும் விரைவில் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இதனால் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறைக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைவாக தங்களது சொந்த ஊருக்கு செல்லலாம். மேலும் இந்த பேருந்து நிலையத்தை விரைவிலேயே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேருந்து நிலையம் செயல்பட ஆரம்பித்தால் தினசரி 2310 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் 840 ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும். இந்தப் பேருந்து நிலைய வளாகத்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வு வரை தனி காவல் நிலையம் மருந்து கடைகள் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags :
Advertisement