முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: "பயணிகளுக்கு குட் நியூஸ்.." அடுத்தடுத்து தயாராகும் வசதிகள்..!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

11:18 AM Feb 05, 2024 IST | 1newsnationuser4
Advertisement

சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. முறையான அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

Advertisement

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் காவல் நிலைய அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சர் சேகர்பாபு விரைவில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்திருக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்த 35 நாட்களுக்குள் 90% அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவிலேயே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் ஏடிஎம் மையங்கள் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதி ஏப்ரல் மாதத்திற்குள் தயாராகும் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். படிப்படியாக பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் அமைத்து தரப்படும் எனக் கூறிய அமைச்சர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு கிளாம்பாக்கத்திலும் கடைகள் அமைக்க உரிமம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
#CMTamilnaduhotelkilambakkam bus standSekar BabuTamilnadu
Advertisement
Next Article