For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடக்கூடாது.? ஏன் தெரியுமா.!?

04:45 PM Feb 24, 2024 IST | 1newsnationuser5
சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடக்கூடாது   ஏன் தெரியுமா
Advertisement

உணவே மருந்து என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆரோக்கியமான நோய் நொடி இல்லாத வாழ்க்கைக்கு ஊட்டச்சத்தான உணவை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடும் போது உடலில் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம். இதையேதான் உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் பழமொழியாக கூறியுள்ளனர்.

Advertisement

ஆனால் சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பவர்கள் ஒரு சில உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்களினால் பலருக்கும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் அதிகரித்து வருகின்றது. இந்த நோய் பாதிப்பை தீவிர படுத்தாமல் இருப்பதற்காக இந்த குறிப்பிட்ட ஐந்து உணவுகளை கண்டிப்பாக உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது.

1. எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, கீரை, கிவி, கொய்யா போன்ற வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த வைட்டமின் சி சத்துக்கள் உணவில் கற்களை உருவாக்கும் குணம் கொண்டது.
2. கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு ,பார்லி போன்ற முழு தானிய வகைகள் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் சிறுநீரகத்திற்கு இது நல்லதல்ல.
3. சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் உப்பு மற்றும் காரம் அதிகமாக உள்ள உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4. சோயா பொருட்களில் ஆக்சலைட் என்ற வேதிப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆக்சலைட் சிறுநீரகங்களில் கற்களை உருவாக்கும் என்பதால்  இப்பிரச்சனை இருப்பவர்கள் சோயாவில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
5. சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் மீன், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இதிலுள்ள அதிக அளவு புரதச்சத்து சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும்.

English summary : kidney stones affected peoples should not eat these foods

Read more : ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.? ஏன் தெரியுமா.!?

Advertisement