Yummy recipes : கேரளா ஸ்டைலில் மொறு மொறு மீன் வருவல்.! ட்ரை பண்ணி பாருங்க.!!
பொதுவாக நம்மில் பலரும் வீடுகளில் மீன் வருவல் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் கேரளா ஸ்டைலில் கொஞ்சம் வித்தியாசமாக மீன் வருவல் இப்படி செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கேரளா ஸ்டைலில் மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை குறித்து பதிவில் பார்க்கலாம்?
தேவையான பொருட்கள் -
மீன் - 1/2 கிலோ, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 1 1/2 தேக்கரண்டி, ரெட் சில்லி பவுடர் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 3/4 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை -
முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு இந்த கலவையில் மீன் போட்டு மசாலாவுடன் நன்றாக பிரட்டி எடுத்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
பின்பு ஒரு தோசை கல்லில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கருவேப்பிலை போட்டு நன்றாக பொறிந்து வந்த பின்பு கருவேப்பிலையை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மீன் துண்டுகளை போட்டு பொறிக்க வேண்டும். நன்றாக பொரித்த பின்பு மீன் துண்டுகள் மீது வறுத்த கருவேப்பிலை தூவி பரிமாறினால் சுவையான மொறு மொறு கேரளா ஸ்டைல் மீன் வருவல் தயார்.