செல்போனை தூங்கும் போதும் அருகில் வைத்திருக்கிறீர்களா.? இந்த ஆபத்துக்கள் உங்களைத் தாக்கலாம்.!
பொதுவாகவே செல்போன்கள் இன்று தவிர்க்க முடியாத ஒரு பொருளாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை இன்றைய நவீன உலகில் உருவாகி இருக்கிறது. எனினும் செல்போன்களை பயன்படுத்துவதால் கதிர்வீச்ச அபாயம் மற்றும் பல அபாயங்கள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் பார்வை கோளாறுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக சிலருக்கு செல்போன்களை தலையணைக்கு அருகில் வைத்து தூங்கும் பழக்கம் இருந்து வருகிறது. அலாரம் வைத்திருப்பது மற்றும் ஏதேனும் அவசர அழைப்புகள் வந்தால் உடனடியாக எடுத்து பேசுவதற்கு வசதியாக அப்படி செய்கிறார்கள் எனினும் இதனால் ஏற்படும் அபாயங்கள் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு உறங்குவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்று பார்ப்போம்.
செல்போன்களை தலையணைக்கு அருகில் வைத்து தூங்குவதால் அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றால் தலைவலி மற்றும் தசை வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செல்போன்களில் இருந்து வெளிப்படும் நீல நிற கதிர்கள் தூக்கத்திற்கு உதவும் காரமோன்களில் பாதிப்பை ஏற்படுத்தி தூக்கமின்மையை உருவாக்கும் எனவும் எச்சரிக்கின்றனர்.
மேலும் இந்த கதிர்வீச்சுகளுக்கு தொடர்ந்து ஆளாகும்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். செல்போன்கள் தூங்கும் போது தலையணைக்கு அருகில் இருப்பதால் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் உருவாகும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. எனவே உங்கள் கைபேசிகளை தூங்குவதற்கு முன் உங்கள் படுக்கையில் இருந்து தூரமாக வைத்துவிட்டு தூங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதுவே ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.