For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அண்ணாமலைக்கு ரபேல் வாட்சை பரிசளித்ததே திமுக-வை சேர்ந்தவர் தான்..!! - சர்ச்சையை கிளப்பிய கல்யாணராமன்!

Kalyan Raman's claim that it was Senthil Balaji who gave the Rafale watch to Annamalai has created a stir.
01:17 PM Jul 21, 2024 IST | Mari Thangam
அண்ணாமலைக்கு ரபேல் வாட்சை பரிசளித்ததே திமுக வை சேர்ந்தவர் தான்       சர்ச்சையை கிளப்பிய கல்யாணராமன்
Advertisement

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அணிந்திருந்த ரஃபேல் வாட்ச், விவகாரம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில் அண்ணாமலைக்கு ரஃபேல் வாட்ச்சை கொடுத்ததே செந்தில் பாலாஜி தான் எனக் கூறி மீண்டும் புயலைக் கிளப்பி விட்டுள்ளார் கல்யாண் ராமன்.

Advertisement

தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்தால் அக்கட்சியின் மூத்த நிர்வாகி கல்யாணராமன் பாஜகவில் இருந்து ஓராண்டிற்கு நீக்கப்பட்டார். இந்தநிலையில், கல்யாணராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அந்த Rafale 6 லட்சம் வாட்ச் 17-18 ADMK /TTV Group எம் எல் ஏக்களை கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தனது உறவினராகிய அண்ணாமலை வைத்து நன்றாக கவனித்துக் கொண்டதற்காக செந்தில் பாலாஜியால் 2017ல் சுயமாக வழங்கப்பட்ட வெகுமதி . அதனால தான் அந்த ஆளுக்கு அண்ணாமலையிடம் வாட்ச்சின் பில் இல்லை என்பதும் தெரியும். அதை தரமுடியாது என்பதும் தெரியும்.

கொடுத்தவனே கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமல் தயங்கிய அண்ணாமலை அடுத்தவன் கட்டி இருந்த வாட்ச்சை விலை கொடுத்து வாங்கியதாக பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பதில் சொல்ல 100 நாட்கள் ஆனதன் ரகசியம் இதுதான். மொத்தத்தில் நான் ஒரு கிளீன் ஆபிசர் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தது எல்லாம் பொய். (பொதுவாக எந்த மடையனும் 2016ல் விற்று தீர்ந்துவிட்ட ஒரு வாட்ச்சை தேடி, அதை 2021ல் அதுவும் உடலுடன் ஒட்டி உறவாடும் ஒரு பொருளை second hand பொருளாக வாங்கமாட்டார்கள் என்பது உலகத்திற்கு தெரியும். தான் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ளும் முட்டாளுக்குத் தெரியாது) என கல்யாண ராமன் தனது பதிவில் கூறியுள்ளார்.

Read more ; சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 20 பேர் பலி..!! பலர் மாயம்!!

Tags :
Advertisement