For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனைவியின் அடங்கா காமம்..! கள்ளக்காதலை கைவிட மறுப்பு…! அப்பாவி கணவன் எடுத்த விபரீத முடிவு..!

10:24 AM May 13, 2024 IST | shyamala
மனைவியின் அடங்கா காமம்    கள்ளக்காதலை கைவிட மறுப்பு…  அப்பாவி கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மற்றும் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மோகன். பழைய இரும்பு வியாபாரியான இவருக்கு யமுனா என்ற மனைவியும், 13 வயதில் சாய் சுவாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகனும் இருந்தனர். இவரது மனைவி யமுனா அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் பணி புரிந்து வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், மனைவி யமுனாவுக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த மோகன் கண்டித்துள்ளார். அதனை பொருட்ப்படுத்தாத யமுனா, கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதனால், மோகன் - யமுனா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கள்ளக்காதல் விவகாரம் மீண்டும் இருவருக்கும் இடையே பூதாக்கரமாக வெடிக்க தொடங்கியது. அதனை சற்றும் பொருட்படுத்தாமல் யமுனா வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால், மனமுடைந்த மோகன், தற்கொலை செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, குழந்தைகள் மீது அதிகம் பாசம் கொண்ட மோகன், அனாதையாக இருக்க விரும்பாமல் தன்னுடன் அழைத்து செல்ல எண்ணி, தனது 13 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, தனது 5 வயது மகன் தேஜசையும், கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

பின்னர், வேலைக்கு சென்ற மனைவி யமுனா மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவி யமுனாவிடன் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஓய்வு பெற்ற அரசு ஊழியரான தந்தைக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் அரசு ஊழியர் HRA கோர முடியாது..” உச்ச நீதிமன்ற உத்தரவு.!!

Advertisement