பண்டிகை கால முன்பணம் பெற களஞ்சியம் செயலி..!! - தமிழக அரசின் உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு
பண்டிகை கால முன்பணம் பெறுவதற்கு அரசு ஊழியர்கள் "களஞ்சியம்" செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கணக்குத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அனைத்து பணியாளர்களும் தங்களது பண்டிகை முன்பணத்தினை களஞ்சியம் செல்போன் செயலி மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களஞ்சியம் செயலி மூலம் தீபாவளி பண்டிகைக்கு முன் பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மை நிதித்துறை செயலாளருக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், " அரசு ஊழியர்கள் இனிமேல் 'களஞ்சியம்' என்ற செயலி மூலம் தான் தீபாவளி பண்டிகைக்கு முன் பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என கணக்குத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த சுற்றறிக்கை அரசு ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. ஏனென்றால் பொதுவாக தமிழ்நாட்டில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டி ருக்கின்றனர். குறிப்பாக அலுவலக உதவியாளர் முதல் உயர் அதிகாரி வரை பணிபுரிகின்றனர். ஆனால் அத்தனை பேரும் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பார்களா, அப்படியே வைத்திருந்தாலும் எல்லோரும் 'களஞ்சியம்' செயலியை பயன்படுத்த தெரிந்தவர்களாக இருப்பார்களா, என்றால் கேள்விக்குறியாக உள்ளது.
அது மட்டுமல்ல. பல நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடுகளால் 'களஞ்சியம்' செயலி செயல்படுவதில்லை. எனவே, பண்டிகை முன்பணத்திற்கு களஞ்சியம் செயலி மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்தாமல் ஊழியர் நலன் கருதி தற்போதைய ஆணையாளரின் உத்தரவை ரத்து செய்து பழைய முறையில் அனு மதித்திட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்.
Read more ; 15 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சாம்சங் முடிவு.. இந்திய பணியாளர்களை பாதிக்குமா?