For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

DMK Files: கலாநிதி வீராசாமி குடும்பத்தின் சொத்து மதிப்பு, ரூ.2,923 கோடி...! அண்ணாமலை அதிரடி

05:30 AM Mar 30, 2024 IST | Vignesh
dmk files  கலாநிதி வீராசாமி  குடும்பத்தின் சொத்து மதிப்பு  ரூ 2 923 கோடி     அண்ணாமலை அதிரடி
Advertisement

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று, வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் பால் கனகராஜ் அவர்களை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் அண்ணாமலை; சிங்காரச் சென்னை என்று கூறி, இத்தனை ஆண்டுகளில் சென்னையை மூழ்கும் சென்னையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். வடசென்னையில், அண்ணன் பால் கனகராஜ் அவர்களைத் தேர்ந்தெடுத்து, பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், வடசென்னையை முழுவதுமாக முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வோம். சென்னையின் ஒரு பகுதி கூட வெள்ளத்தில் மூழ்காதவாறு நடவடிக்கைகள் எடுப்போம்.

Advertisement

நமது பிரதமர் அவர்கள், மூன்றாவது முறையாக, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, அதில் நமது வடசென்னை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, அண்ணன் பால் கனகராஜ் அவர்களும் இருக்க வேண்டும் என்பதற்காக, அடுத்த இருபது நாட்களும் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். நமது பாரதப் பிரதமர் ஆட்சியில், பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

அண்ணாமலை, இடஒதுக்கீடுக்கு எதிரானவன் என்கிறார்கள் திமுகவினர். ஆம். அண்ணாமலை, அரசியலில் வாரிசு இடஒதுக்கீடுக்கு எதிரானவன். வடசென்னை திமுக வேட்பாளர், திமுக தலைவர் ஆற்காடு வீராசாமி அவர்களின் மகன் கலாநிதி. இந்த வாரிசு அரசியலுக்கு நான் எதிரானவன் தான். திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தனது சொத்து மதிப்பாக, தேர்தல் பத்திரத்தில், ரூ.31 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக வெளியிட்ட திமுக ஃபைல்ஸில், கலாநிதி வீராசாமி அவர்கள் குடும்பத்தின் சொத்து மதிப்பு, ரூ.2,923 கோடி. சமீபத்தில், சென்னை கோயம்பேடு அருகே, கலாநிதி வீராசாமி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசுக்குச் சொந்தமான 62.93 சதுர மீட்டர் கிராம நத்தம் இடத்தை, திரும்பிக் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்குத்தான் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்கிறது பாஜக என்றார்.

Advertisement