கலைஞர் கனவு இல்லத் திட்டம்... மார்ச் மாதத்திற்குள் 1,19,00,00 கான்க்ரீட் வீடுகள்...! தமிழக அரசு தகவல்
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கான்க்ரீட் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பெரும் கனவுகளில் ஒன்று சொந்தமான ஒரு கான்கீரீட் வீடு கட்டுவது. குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம். கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது. இந்த திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை விரைந்து முடிக்க ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும் இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கான்க்ரீட் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.