முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: மார்ச் மாதத்திற்கான ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.!

03:57 PM Mar 15, 2024 IST | Mohisha
Advertisement

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000/- வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்த பெண்களுக்கு அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

Advertisement

சம்பள தேதியுடன் இந்தத் தொகை குளறுபடி ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.இன்று காலை அனைத்து பயனர்களின் வங்கி கணக்கிற்கும் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. உங்களது வங்கி கணக்கிலும் பணம் வந்திருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெறுவோரின் எண்ணிக்கை 1,13,84,300 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அதிக பயனர்கள் இணைந்து வருவதால் இந்தத் திட்டத்திற்கான பணியாட்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.

Read More: மியான்மார் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை.! லாட்டரி கிங் மாட்டின் கடந்து வந்த பாதை.!

Advertisement
Next Article