முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ChatGPT போல் இனி Whatsapp-லும் வந்தது AI Chatbot ; எப்படி பயன்படுத்துவது?

05:06 PM Apr 21, 2024 IST | Mari Thangam
Advertisement

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ சாட்போட் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாட் ஜி.பி.டி-ன் செயல்பாடு போல் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது  வாட்ஸ்அப்-ல் ஏ.ஐ  சாட்போட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வாட்ஸ்அப்-ன் சர்ச் பாரில் (search bar) இடம் பெறும் வகையில் கொண்டு வரப்படுகிறது. 

தற்போது உங்களுடைய மெசேஜ்களை வகைப்படுத்துவதை எளிதாக மாற்றும் வகையில் மற்றுமொரு அம்சத்தை இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது வாட்ஸ்அப்-ன் சர்ச் பாரில் இடம் பெறும் வகையில் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலமாக சரியான சாட்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். இமெயில்களை வகைப்படுத்துவது போல உங்களுடைய சாட்களையும் இனி உங்களால் வகைப்படுத்த முடியும்.

வாட்ஸ்அப் இப்போதைக்கு மூன்று ஃபில்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது - All, Unread மற்றும் Groups. இதில் All ஃபில்டர் என்பது டீபால்ட் ஆக உங்களுடைய சாட்கள் அனைத்தையும் எந்த ஒரு ஃபில்டரும் இல்லாமல் காட்டக்கூடியது. Unread ஃபில்டர் என்பது பெயர் குறிப்பிடுவது போல இதுவரை நீங்கள் படிக்காத அல்லது பதில் அளிக்காத அல்லது unread என்று நீங்கள் குறித்து வைத்த சாட்களை காட்டும்.  Groups ஃபில்டர் என்பது உங்களுடைய குரூப் சாட்கள் அனைத்தையும் காட்டக் கூடியது. இது தற்போது குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனைக் கொண்டு செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், வாட்ஸ்அப்பில் நிகழ்நேர படத்தை உருவாக்க முடியும் என்று Meta தெரிவித்துள்ளது. Meta AI உதவியுடன், டெக்ஸ்ட் பதிவேற்றினால், படங்களை எளிதாக உருவாக்க முடியும். தரத்தை இழக்காமல் புகைப்படங்களை அனிமேஷன் செய்யலாம். இந்த சேவைகளை meta.ai இன் உதவியுடன் இணையத்திலும் பெறலாம்.

வாட்ஸ்அப் அரட்டை மெனுவில் உள்ள Meta AI ஐகானைக் கிளிக் செய்தால், 'Meta AI Ask Anything' என்று ஒரு பாப்-அப் திறக்கும், இது வெவ்வேறு வண்ணங்களுடன் வளைந்த வடிவத்தில் இருக்கும். Continue என்பதைக் கிளிக் செய்தால், Meta AI உடன் திறக்கும் Chat Menu, Chat GPT போன்றே பயனரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.

Tags :
#whatsappupdateAI chatbotmeta AI assistant
Advertisement
Next Article