சுதந்திர தினம்..!! திமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! தமிழ்நாடு அரசு சார்பில் யார் செல்வார்கள்..?
சுதந்திர தினம், குடியரசு தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்றும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. ஆனால், மழை காரணமாக ஆளுநர் மாளிகையே தேநீர் விருந்தை தள்ளிவைத்தது.
அதேபோல் கடந்த குடியரசு தின விருந்தையும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தன. இந்நிலையில், இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று மாலை தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்தன.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Read More : செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..!! ஜாமீன் வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்..!! என்ன சொல்லிருக்கு தெரியுமா..?