வெறும் நான்கே மணி நேரம் தான்..!! ஃபுல் சார்ஜ் ஆகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..!! விலையும் இவ்வளவு கம்மியா..?
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், விரைந்து சார்ஜிங் செய்து கொள்ளும் திறனுடைய மற்றும் நீண்ட தூரம் செல்லக் கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவையும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய மார்க்கெட்டில் மேற்கண்ட இரு முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ளன. Techo Electra Neo மற்றும் BGauss C12i ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் அவை. இந்த இரண்டும் வெறும் 4 முதல் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். மேலும், இவை அலாய் வீல்ஸ் மற்றும் டியூப்லெஸ் டயர்களுடன் வருகின்றன. இப்போது இந்த ஸ்கூட்டர்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
டெக்கோ எலெக்ட்ரா நியோ (Techo Electra Neo)
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கச்சிதமான 10 இன்ச் வீல்களை கொண்டது. இவை டியூப்லெஸ் டயர்களுடன் கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட் சார்ஜரை பயன்படுத்தி 4 முதல் 5 மணி நேரத்தில் வண்டியை முழுவதும் சார்ஜ் செய்துவிடலாம். நேர்த்தியான இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.41,919 மட்டுமே. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், சுமார் 55 கிலோமீட்டர்கள் வரை செல்லும் ரேஞ்சை வழங்க இதில் 12V 20Ah பேட்டரி செட்டப் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் மொத்த எடை 51 கிலோ கிராம். 250W மோட்டார் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்ல கூடியதாக இருக்கிறது.
பிகாஸ் சி12ஐ (BGauss C12i)
BGauss C12i ஸ்கூட்டர் 780 மிமீ சீட் ஹைட்டை கொண்டுள்ளது. இது இல்லத்தரசிகள் மற்றும் வயதான நபர்கள் உட்பட பலதரப்பட்ட ரைடர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லக் கூடும். இந்த ஸ்கூட்டரில் 12 இன்ச் ஃப்ரன்ட் டயர் மற்றும் 10 இன்ச் ரியர் டயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 135 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,999 முதல் துவங்குகிறது. இது மட்டுமல்ல, ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் பேட்டரி சார்ஜ் ஸ்டேட்டஸ் போன்ற தரவை காட்டும் ஆல்-டிஜிட்டல் கன்சோல் இதில் உள்ளது.