முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உடலுறவின்போது இதமட்டும் செய்யவே செய்யாதீங்க!… தொண்டை புற்றுநோய் எச்சரிக்கை!… ஆய்வில் அதிர்ச்சி!

06:59 AM Nov 22, 2023 IST | 1newsnationuser3
Advertisement

கடந்த 2 சதாப்தங்களாக வாய்வழி செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் தொண்டை புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த உலகில் மனிதர்களை போல வேறு எந்த உயிரினமும் ஆண்டு தோறும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மனித இனமும் நாகரீகமடைய தொடங்கிய பின்னர் தனது பாலியல் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இனப்பெருக்கத்தையும் தாண்டி மனிதர்கள் ஒரு கூட்டு சமூகமாக வாழ இந்த தனித்தன்மை கைகொடுத்தது என்றே சொல்லலாம். இருப்பினும் இதனால் பிரச்னைகள் வராமல் இல்லை. ஏராளமான பிரச்னைகளை இந்த செக்ஸ் மூலம் மனிதர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

அதாவது, உடலுறவின் போதும் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் தொண்டை புற்றுநோய் பாதிப்பு தற்போது மனிதர்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. லான்செட் குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட உலகெங்கிலும் உள்ள 3 ஆண்களில் 1 பேர் குறைந்தது ஒரு பிறப்புறுப்பு HPV வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 5 இல் 1 பேர் அதிக ஆபத்து என அறியப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றால் HPV வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், 3,40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஒரு ஒற்றுமை இருந்தது. இவர்கள் அனைவரும் பாப்பிலோமாவைரஸ் எனப்படும் ஒரு வகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த வைரஸ் மிகவும் ஆபத்தனான வைரஸாகும். இந்த வரைஸ் பாதிப்பை குணப்படுத்த மருந்தோ, சிகிச்சையோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இது வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது. இது ஒரு பாலியல் சார்ந்த வைரஸ். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது.

இந்த புற்றுநோய் பெரும்பாலும் உங்கள் தொண்டையின் உள்ளே இருக்கும் தட்டையான செல்களில் தொடங்குகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, கடந்த இரண்டு தசாப்தங்களாக தொண்டை புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. தொண்டை புற்றுநோயில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை மனித பாப்பிலோமா வைரஸ் அல்லது எச்பிவியால் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன, இது கர்ப்பப்பை வாய் மற்றும் ஆசனவாய் புற்றுநோய்களையும் ஏற்படுத்துகிறது. மேலும் தொண்டை புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதற்கு வாய்வழி செக்ஸ் காரணம் என்று பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்வழி செக்ஸ் என்பது தங்கள் பிறப்புறுப்பு அல்லது பிறப்புறுப்பு பகுதியைத் தூண்டுவதற்கு வாயைப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது. புற்றுநோய் தவிர வேறு சில ஆபத்துகளும் இந்த வாய்வழி செக்ஸ் காரணமாக ஏற்படுகிறது. குறிப்பாக சிபிலிஸ், கிளமிடியா, கோனோரியா போன்ற பாலியல் நோய்கள் ஏற்படுகின்றன. தடுப்பூசிகள் HPV தொடர்பான தொண்டை புற்றுநோய்க பாதிப்பை குறைக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 12 வயதிற்குள் HPV தடுப்பூசியின் இரண்டு இரண்டு டோஸ்களை எந்த விதமான தொற்று அல்லது வியாதியையும் தடுக்க அனைவருக்கும் பரிந்துரைக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கு HPV மிகவும் பொதுவானது என்பதால், சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடுவது முக்கியம் அறிவுறுத்தப்படுகிறது.

HPV-யுடன் தொடர்புடைய தொண்டைப் புற்றுநோயானது ஐம்பது வயதிற்குட்பட்டவர்களை மிகவும் பொதுவாக பாதிக்கிறது என்றாலும், பல ஆண்டுகளுக்கு பிறகு புற்றுநோய் உருவாகிறது. கழுத்தில் வலியற்ற கட்டி, காது வலி., உணவு விழுங்கும் போது வலி, உணவு தொண்டையில் ஒட்டிக்கொண்டது போன்ற உணர்வு ஆகியவை தொண்டை புற்றுநோயின் சில அறிகுறிகளில் அடங்கும்.

Tags :
Lancet Global Healthoral sexஆய்வில் அதிர்ச்சிதொண்டை புற்றுநோய்லான்செட் குளோபல் ஹெல்த்வாய்வழி செக்ஸ்
Advertisement
Next Article