For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இதை மட்டும் பண்ணுங்க’..!! ’எல்லாம் நான் பாத்துக்குறேன்’..!! பெண்கள் முன் கதறி அழுத வடகொரிய அதிபர்..!!

07:33 AM Dec 07, 2023 IST | 1newsnationuser6
’இதை மட்டும் பண்ணுங்க’     ’எல்லாம் நான் பாத்துக்குறேன்’     பெண்கள் முன் கதறி அழுத வடகொரிய அதிபர்
Advertisement

வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது வடகொரியாவில். விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். இந்த நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் பதவியில் உள்ளார். இந்நிலையில்தான் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறி மேடையில் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

அதாவது தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அதிபர் கிம்ஜாங் உன் பேசுகையில், ”நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என பேசினார்.

இப்படி பேசுகையில் கிம்ஜாங் உன் கண்கலங்கினார். இதையடுத்து அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டை நாடுகளை விட அதிகம்தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement