பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரர்கள் 16 பேர் பலி!. பாகிஸ்தானில் அதிகரிக்கும் பதற்றம்!
08:41 AM Dec 22, 2024 IST | Kokila
Advertisement
Pakistan: பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை விரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
Advertisement
பாகிஸ்தான் வட மேற்கு, கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கீன் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்று காலை 30 பேர் கொண்ட தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில்,பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். கடந்த சில மாதங்களில் பயங்கரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் இதுவும் ஒன்று.
அதாவது, இதே மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில் 16 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், மேலும் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.