ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்..!! 535 கிமீ பயணிக்கலாம்..!! Benz நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் அதன் புத்தம் புதிய இக்யூஏ (EQA) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஏ எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் விலை குறைவான எலக்ட்ரிக் பென்ஸ் காராக இக்யூஏ விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த சூட்டோடு சூடாக, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் இக்யூபி எலக்ட்ரிக் காரையும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு மேம்படுத்தியுள்ளது.
இக்யூஏ காரின் அறிமுகத்திற்கு முன்பு வரை இந்தியாவில் குறைந்த விலையில் கிடைத்து வந்த எலக்ட்ரிக் காராக இக்யூபி விளங்கி வந்தது. 250+ மற்றும் 350 4மேட்டிக் என 2 விதமான வேரியண்ட்களில் புதிய மெர்சிடிஸ் இக்யூபி அறிமுகம் செய்துள்ளது. இதில், இக்யூபி 250+ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.70.90 லட்சமும், இக்யூபி 350 4மேட்டிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.77.5 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய இக்யூபி ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்கள் என்று பார்த்தால், காரின் முன்பக்கத்தில் ஸ்டார் பேட்டர்னில் கிரில் பகுதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார் பேட்டர்ன் கிரில் பகுதியை போன்று, காருக்கு உள்ளேயும் டேஸ்போர்டு மற்றும் கதவுகளுக்கு பின்பக்கத்தில் ஸ்டார் பேட்டர்னில் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் வழங்கப்படும். தொழிற்நுட்ப அம்சங்களில் அப்டேட்கள் என்று பார்த்தால், எம்பக்ஸ் சிஸ்டம் 2வது ஜென்ரேஷனுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 710-வாட் பர்ம்ஸ்டர் ஆடியோ சிஸ்டமும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 250+ வேரியண்ட்டை காட்டிலும் 350 4மேட்டிக் வேரியண்ட்டில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை 2.5 வினாடிகள் விரைவாகவே எட்டிவிட முடியும்.
இருப்பினும், இரு வேரியண்ட்களும் எட்டும் டாப்-ஸ்பீடு ஒன்றே. அதேபோல், 2 வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாக 70.5kWh பேட்டரி தான் கிடைக்கும். 350 4மேட்டிக் வேரியண்ட்டில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகபட்சமாக 447 கிமீ தொலைவிற்கும், 250+ வேரியண்ட்டில் 535 கிமீ தொலைவிற்கும் பயணிக்க முடியும். இந்தியாவில் இக்யூபி எலக்ட்ரிக் கார் முதல்முறையாக கடந்த 2023 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
Read More : ”நான் இப்போது உறுதி அளிக்கிறேன்”..!! மனைவி மகாலட்சுமி போட்டோ..!! ரவீந்தர் சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா..?