விமானம் லேட்.. இருக்கை உடைந்திருந்தது..!! இங்க எதுவுமே சரி இல்லை!! - கிரிக்கெட் வீரர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா
கிரிக்கெட் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் மும்பையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்ற போது ஏர் இந்தியாவுடனான தனது விரக்தியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஏர் இந்தியா நிறுவனத்தின் பிரச்சனைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட கருத்து இணையத்தில் வைரலானது.
அந்த பதிவில், மும்பை விமான நிலையத்திலிருந்து தனது விமானம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்ததாக ரோஸ் கூறினார். விமானத்தில் ஏறியதும், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை உடைந்திருப்பதை ககண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த விமான பயணம் மிக மோசமானது எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ரோட்ஸின் புகாருக்கு ஏர் இந்தியா மன்னிப்புக் கேட்டுள்ளது, மேலும் இந்த விஷயத்தை முழுமையாக விசாரிப்பதாகவும் உறுதியளித்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விமான நிறுவனத்தின் கருத்து உறுதியளித்தது. உத்தரவாதம் இருந்தபோதிலும், ரோட்ஸின் இடுகை பல சமூக ஊடக பயனர்களுடன் எதிரொலித்தது, அவர்களில் சிலர் இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்,
Read more ; ப்யூன் அண்ணா தானே.. சகஜமாக பேசிய 13 வயது சிறுமி..!! வாயில் துணியை கட்டி.. பதற வைக்கும் சம்பவம்…!!