முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆஸ்கார் விருது பெற்ற டைட்டானிக், அவதார் படத் தயாரிப்பாளர் காலமானார்!

John Landau, who had been battling cancer for the past 16 months, died yesterday (July 06) after failing treatment.
12:22 PM Jul 07, 2024 IST | Mari Thangam
Advertisement

கடந்த 16 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த ஜான் லாண்டவ் நேற்று (ஜூலை.06) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

டைட்டானிக், அவதார் மற்றும் தி வே ஆஃப் தி வாட்டர் ஆகிய படங்களுக்காக ஆஸ்கார் விருது வென்ற தயாரிப்பாளரான ஜான் லான்டௌ காலமானார். அவருக்கு வயது 63. ஹாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான எலி லாண்டாவின் மகனான இவர், 1980களில் தன் தந்தை வழியில் படத்தயாரிப்பில் ப்ரொடக்‌ஷன் மேனேஜராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனின் கனவும், கதையும் உயிரூட்டம் பெற காரணகர்த்தாவான ஜான் லாண்டாவ், டைட்டானிக் படத்துக்காக ஆஸ்கர் விருதினை வென்றுள்ளார்.

அவரது இறப்பு குறித்து அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ள அறிக்கையில், " எங்கள் நண்பரும் தலைவருமான ஜான் லான்டௌவின் இழப்பால் வருந்துகிறது. அவரின் மரபு அவர் தயாரித்த படங்கள் மட்டுமல்ல, அவர் கட்டமைத்த அக்கறை, அயராத நுண்ணறிவு, முற்றிலும் தனித்துவமானது" எனக் கூறியுள்ளார். ஜான் லான்டௌன் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து தயாரித்த டைட்டானிக், அவதார், தி வே ஆஃப் தி வாட்டர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 2 பில்லியன் டாலருக்கு மேல் வசூலித்த ஒன்றாக உள்ளன.

63 வயதில் மரணம் அடைந்த ஜான் லாண்டெள-க்கு ஜூலி என்ற மனைவியும், ஜேமி மற்றும் ஜோடி என்ற ஒரு மகன், ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜான் லாண்டாவின் மறைவுக்கு இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், டைட்டானிக் பட நடிகை கேத் வின்ஸ்லெட் உள்ளிட்ட ஹாலிவுட் திரையுலகினர் நேரிலும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜான் லான்டௌ தயாரித்த படங்கள்: கேம்பஸ் மேன் (1987), டைட்டானிக் (1997), சோலாரிஸ் (2002), அவதார் (2009), அலிடா: போர் ஏஞ்சல் (2019), அவதார்: த வே ஆஃப் வாட்டர் (2022).

Tags :
Hollywood film industryJohn Landautitanic and avatar producer
Advertisement
Next Article