For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Wipro நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! ரூ.8 லட்சம் வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!

07:25 AM May 14, 2024 IST | Chella
wipro நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை     ரூ 8 லட்சம் வரை சம்பளம்     விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

விப்ரோ நிறுவனத்தில் காலியாகவுள்ள சிஸ்டம் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோ ஒன்று. இந்த நிறுவனம் பெங்களூருவில் இயங்கி வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் விப்ரோவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி, விப்ரோ நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இருப்பினும் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது பற்றிய விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும், அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோர் வின்டோஸ் (Windows), அவுட்லுக் (Outlook), டீம்ஸ் (Teams), சிட்ரிக்ஸ் (Citrix), விபிஎன் (VPN), விடிஐ (VDI), செக்யூரிட்டி அப் (Security App) உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், நல்ல கம்யூனிகேஷன் ஸ்கீல்ஸ் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மற்றும் இ-மெயில் மூலம் பதிலளித்து அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டியிருக்கும். ரிமோட் முறையில் சிஸ்டம் பிரச்சனைகளை தீர்க்க அறிந்திருக்க வேண்டும். மேலும், புதிய தொழில்நுட்பம் பற்றி கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி மாத சம்பளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வேலையை விரும்புவோர் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://careers.wipro.com/careers-home/jobs/3049500?lang=en-us&previousLocale=en-US

Read More : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ஹால்டிக்கெட் எப்போது வெளியீடு..? தேர்வர்களே தேதியை நோட் பண்ணிக்கோங்க..!!

Advertisement