பாரத ஸ்டேட் வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.93,960 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள வணிக நிதி அலுவலர், துணை மேலாளர் (காப்பக நிபுணர்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் விவரம் :
பணி: Trade Finance Officer (MMGS-II)
காலியிடங்கள்: 150
கல்வித் தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். ஐஐபிஎப் வழங்கும் Forex சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.12.2024 தேதியின்படி 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 64,820 - ரூ.93,960 வரை வழங்கப்படும்.
பணி: Deputy Manager (Archivist) - 1
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் நவீன இந்திய வரலாற்றில் சிறப்புப் பாடத்துடன் வரலாற்றில் முதுகலை பட்டம் (கி.பி. 1750-க்கு பிந்தைய காலம்) பெற்றிருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.64,820 - ரூ.93,960 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 31.12.2024 தேதியின்படி 27 முதல் 37-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் பயிற்சிக்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு. இதர அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi/careers அல்லது https://bank.sbi/web/careers/current-openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.1.2025