உடைந்து போன முட்டைகளை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா..? உயிரையே பறித்துவிடும்..!! மருத்துவர்கள் பகிரங்க எச்சரிக்கை..!!
கீறல் விழுந்த அல்லது உடைந்த முட்டைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் உணவாக முட்டை உள்ளது. இது, நமது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஜிம்மிற்கு செல்பவர்கள் தினமுமே தங்களது உணவில் முட்டையை சேர்த்துக் கொள்கின்றனர். பொதுவாகக் கடையில் முட்டை வாங்கும் போது ஒன்றிரண்டு உடைவது இயல்பு. அப்படி உடையும் முட்டைகளைச் சிலர் குப்பையில் தூக்கிப் போட்டுவிடுவார்கள்.
ஆனால், சிலர் முட்டை வீணாகிவிடும் என்பதற்காக அதை ஆம்லெட்டாகவோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடுவார்கள். இப்படிச் சாப்பிடுவதால் உடலுக்குப் பாதிப்புகள் ஏற்படுகிறது. முட்டைகளில் சால்மோனெல்லா என்டெரிடிடிஸ் (SE) பாக்டீரியாக்கள் உள்ளது. இந்த பாக்டீரியா உணவில் சேர்ந்தால் விஷமாவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளதாம்.
இந்த பாக்டீரியாவில் பாதிக்கப்படும் நபர்கள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாந்தி ஏற்படும். இது ஒரு தொற்று நோயாகக் கருதப்படுகிறது. குறிப்பாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால், மரணம் கூட நிகழும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், முட்டையை முழுமையாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சமைக்கும் போது முட்டைகள் வெடித்தால், அவை பாதுகாப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.