For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

SBI வங்கியில் மாதம் ரூ.69,000 சம்பளத்தில் வேலை..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

State Bank of India, the country's largest public sector bank, has issued a notification to fill the vacancies.
05:10 AM Jun 12, 2024 IST | Chella
sbi வங்கியில் மாதம் ரூ 69 000 சம்பளத்தில் வேலை     டைம் இல்ல     உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்த அறிவிப்பு மூலம் காலியாக உள்ள 150 வர்த்தக நிதி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜூன் 7ஆம் தேதி தொடங்கிய இந்த விண்ணப்பம் ஜூன் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் sbi.co.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், IIBF-ல் அந்நிய செலாவணியில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதுதவிர, ஷெட்யூல்டு வங்கியில் வர்த்தக நிதித்துறையில் நிர்வாக அல்லது மேற்பார்வையாளராக 2 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். அதற்கு தனி மதிப்பெண்ணும் உண்டு. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.69,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இப்படி ஒரு மோசடியா..? இனியும் சும்மா இருக்கா மாட்டோம்..!! சுற்றுலா பேருந்துகளுக்கு பகிரங்க எச்சரிக்கை..!!

Tags :
Advertisement