மழை காலம் வந்தாச்சு.. உங்கள் கார்களை முறையாக பாதுகாப்பது எப்படி? - Expert தரும் டிப்ஸ் இதோ..
மழை காலம் என்பதால், உங்கள் கார் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் அதன் உலோகம் மற்றும் இதர பாகங்களில் தண்ணீரின் தாக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மழையில் ஒரு குடையுடன் நாம் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதைப் போலவே, மழைக்காலத்தில் உங்கள் வாகனத்தை மிகச் சிறந்த கவனிப்புடன் வைத்திருக்க சில கார் பராமரிப்பு குறிப்புகள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
இது குறித்து கார் மெக்கானிக் கூறுகையில், "மழை வரும் காலங்களில் வாகனங்களை மேடான பகுதியில் பாதுக்காப்பாக நிறுத்த வேண்டும், கீழிருந்து ஒன்றரை அடி அளவிற்கு மேல் தண்ணீர் இருந்தால் காரை ஓட்டக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் வண்டி பழுதாகி நின்றுவிடும். கார் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டாலோ அல்லது மூழ்கினாலோ உடனே ஸ்டார்ட் செய்யக் கூடாது. அதில் இருக்கும் தண்ணீர் இல்லாமல் காய வேண்டும். பின்னர் ஆயில் புதியதாக மாற்றிவிட்டு 4 சக்கரங்களையும் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் பிரேக் ஆகியவற்றை நன்றாக சரி பார்க்க வேண்டும்.இவ்வாறு சிறு, சிறு வேலைகள் செய்து விட்டுத்தான் வண்டியை எடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் வண்டியை இயக்கினால் கார் முழுவதும் பழுதாகிவிடும். சிலர் சைலென்சரை அடைத்துவிட்டு வண்டியை இயக்குகின்றனர். இதனால் புகை வெளியேறாமல் அடைத்து பிரச்சனை ஏற்படும். ஆக்சிலலேட்டரை கொஞ்சமாக கொடுத்துக்கொண்டே வண்டியை இயக்க வேண்டும். பின்னர் பேட்டரி வயரை கழற்றி விட வேண்டும்" என தெரிவித்தார்.
மழை நீர் உலோகத்தை துருப்பிடிக்கச் செய்கிறது. எனவே காரின் மேல் விழுந்துள்ள அனைத்து கீறல்களுக்கும் பெயிண்ட் அடித்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் காரின் அடிப்பகுதியில் நீங்கள் anti-rust treatment மேற்கொள்ளலாம். மழைநீர் புகும் தாழ்வான இடத்தில் வசிப்பவர்கள் என்றால் அண்டர்பாடி ரப்பர் கோட்டிங் செய்யலாம். கார் டோர்களில் இருக்கும் ரப்பர் லைனிங் மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள் மற்றும் தேவைப்படும் அனைத்து பகுதியிலும் கிரீஸ் அப்பளை செய்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சைலன்சரில் தண்ணீர் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும்?
என்ஜினுக்கு மேல் தண்ணீர் சென்று விட்டால் வண்டியை உடனடியாக ஸ்டார்ட் செய்யக்கூடாது உடனடியாக மெக்கானிக் உதவி அணுக வேண்டும். ஏனென்றால் நாங்கள் ஸ்பார்க் பிளக், ஏர் பில்டர், கார்ப்பரேட்டர் அனைத்தையும் தண்ணீர் உள்ளே செல்லாத அளவிற்கு கழட்டி அதனுள் இருக்கும் தண்ணீரை வெளியே எடுத்து எளிதான முறையில் வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுப்போம்.
நீங்கள் ஸ்டார்ட் ஆகிறது என்று வண்டியை இயக்கினால், தண்ணீர் என்ஜினுக்குள் சென்று இன்ஜின் பழுதாகிவிடும். இன்ஜினில் இருக்கும் பாகங்கள் துருப்பிடித்து விடும் அது சரியாக இருக்காது. வண்டி மழையில் நனைந்து விட்டாலோ அல்லது தண்ணீர் நிரம்பிய இடத்தில் வண்டியை ஓட்டினாலோ ஆப் கிளட்ச்(half clutch) உடன் பிரேக்கை செலுத்திக்கொண்டு சைலன்சரினுள் தண்ணீர் போகாத அளவிற்கு ஆக்சலேட்டரை ஒரே அளவிற்கு செலுத்திக்கொண்டு நாம் செல்ல வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், மழைக்காலங்களில் உங்கள் காரை சிறந்ததாக வைத்திருக்க முடியும். எப்போதும் மழை நீரில் மூழ்கியுள்ள சாலைகளில் பாதுகாப்பாக பயணம் செய்வது நல்லது.
Read more ; மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் தளர்வு மனு : CBI, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!!