முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.1.42 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை..!! தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!!

07:53 AM Feb 13, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

சென்னை வேளச்சேரியில் மத்திய அரசின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய பூவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு டெக்னீசியன் கிரேட் ஏ பணிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேட் ஏ பணிக்கு 5 பேர், சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேட் பி/டெக்னீக்கல் ஆபிசர் பணிக் 3 பேர் என மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி :

டெக்னீசியன் கிரேட் ஏ பணிக்கு ஐடிஐ-யில் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், வெல்டர், மெக்கானிக்கல் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேட் ஏ பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், பிஎஸ்சி விலங்கியல், எம்எஸ்சி விலங்கியல் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். மேலும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேட் பி/டெக்னீக்கல் ஆபிசர் பணிக்க டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்புகளை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

டெக்னீசியன் கிரேடு ஏ பணிக்கு 25 வயதுக்குள்ளும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேடு ஏ பணிக்கு 28 வயதுக்குள்ளும், சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேடு பி/டெக்னீக்கல் ஆபிசர் பணிக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : டெக்னீசியன் கிரேடு ஏ பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேடு ஏ பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். சயின்டிபிக் அசிஸ்டென்ட் கிரேடு பி/டெக்னீக்கல் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் :

மேற்கண்ட பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் மாதம் 11ஆம் தேதிக்குள் https://www.niot.res.in/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வோர் டிரேட் தேர்வு/எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tags :
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம்மத்திய அரசுரூ.1.42 லட்சம் சம்பளம்வேலைவாய்ப்பு
Advertisement
Next Article