For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! கரும்பு நிலுவை தொகை வழங்க கடனுதவி - அரசாணை வெளியீடு

Agriculture Minister MRK Panneerselvam said that the sugarcane farmers have been given loan to pay the outstanding amount.
10:16 AM Jul 05, 2024 IST | Mari Thangam
விவசாயிகளுக்கு குட் நியூஸ்   கரும்பு நிலுவை தொகை வழங்க கடனுதவி   அரசாணை வெளியீடு
Advertisement

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையாக ₹94.49 கோடி வழிவகை கடன் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, "கரும்பு விவசாயிகளின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்குடனும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டும் 2022 ஆம் ஆண்டு முதல் சர்க்கரைத் துறை வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் தமிழ்நாடு 4ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து சர்க்கரை உற்பத்தியில் தொடர்சரிவு என்ற நிலை மாறி 2022-23ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 14.74 இலட்சம் மெ.டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்து மாநிலத்தின் சர்க்கரைத் தேவையான 15 இலட்சம் மெட்ரிக் டன் என்பதைப் பூர்த்தி செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ளது.

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2023-24 அரவைப் பருவத்தில் 15.06.2024 வரை 30.82 இலட்சம் மெ.டன் கரும்பை அரவை செய்து, 8.92 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் 2.75 இலட்சம் மெ.டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது.

உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை விற்பனை செய்து கரும்பு பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை விற்பனை மூலம் கரும்பு பணம் முழுமையாக வழங்க இயலாத சூழ்நிலையில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழிவகைக் கடன் அனுமதிக்கப்பட்டு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கி முடிக்கப்படுகிறது.

கடந்த 2020-21 அரவைப் பருவம் முதல் 2022-23 அரவைப் பருவம் வரை கரும்பு நிலுவை தொகை வழங்கவும், ஆலைகளின் நடைமுறை மூலதனத்திற்காகவும் தமிழ்நாடு அரசு ரூ.600.37 கோடி வழிவகைக் கடனாக அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளால் நடப்பு 2023-24 அரவைப் பருவத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920.99 கோடியில் 15.06.2024 வரை ரூ.835.73 கோடி வழங்கப்பட்டு நிலுவையாக ரூ.85.26 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் வகையில் கரும்பு பணம் விவசாயிகளுக்கு நிலுவையின்றி வழங்கிடவும் ஆலைகளின் நடைமுறை மூலதன செலவிற்காவும் ரூ.94.49 கோடி வழிவகைக் கடன் அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more | தொடரும் அவலம்!! பீகாரில் 15 நாட்களில் 10 பாலங்கள் இடிந்து விழுந்து விபத்து!! – காரணம் என்ன?

Tags :
Advertisement