சென்னை துறைமுகத்தில் வேலை..!! இந்த கல்வி தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
Deputy Chief Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
Deputy Chief Engineer பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000 முதல் ரூ.20,800 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 15.12.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.