For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜே.என்.1 மாறுபாடு எச்சரிக்கை!… அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதாரத்துறை அவசர கடிதம்!

08:41 AM Dec 19, 2023 IST | 1newsnationuser3
ஜே என் 1 மாறுபாடு எச்சரிக்கை … அனைத்து மாநிலங்களுக்கும்  சுகாதாரத்துறை அவசர கடிதம்
Advertisement

நாடு முழுவதும் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது, கேரளாவில் JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், இந்த வகை கொரோனா பரவிய நிலையில், தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், நாடுமுழுவதும் போதுமான பரிசோதனையை உறுதி செய்யவும், விழிப்புடன் இருக்கவும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதார செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி கொரோனா மாதிரிகளை சேரிக்க வேண்டும்.

கொரோனா பாதித்தவர்களுக்கு மரபணு சோதனை தேவைப்பட்டால் அது சார்ந்த ஆய்வகங்களுக்கு உடனடியாக மாதிரிகள் அனுப்பப்பட வேண்டும். பிசிஆர் மற்றும் ஆர்டிபிசி ஆர் பரிசோதனைகளை அதிகளவில் எடுக்க வேண்டும். மாநிலங்கள் தங்களது மாவட்ட வாரியான கோவிட் பாதிப்பை கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்படுகிறது. பண்டிகை காலங்கள் வர உள்ளதால், கோவிட் வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி, சளி, தும்பல், சுவாச பிரச்னை ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான முதல் சுவா பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Tags :
Advertisement