For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

JN.1 புதிய அறிகுறிகள் அலர்ட்!… நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!

08:04 AM Dec 30, 2023 IST | 1newsnationuser3
jn 1 புதிய அறிகுறிகள் அலர்ட் … நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
Advertisement

கடந்த சில நாட்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதில் 145 பேருக்கு JN.1 மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் JN.1 வகை கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது 225 நாட்களில் இல்லாத அதிகபட்ச பாதிப்பாகும். டிசம்பர் 5-ம் தேதி வரை இந்தியாவில் இரட்டை இலக்கங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில் தற்போது புதிய மாறுபாடு மற்றும் குளிர் காலநிலை தோன்றிய பிறகு பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளன.

Advertisement

JN.1 மாறுபாடு பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் நிலையில் கொரோனாவின் பொதுவான அறிகுறிகள் தவிர வேறு சில அறிகுறிகளும் வெளிப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மூக்கு ஒழுகுதல், இருமல், தலைவலி, பலவீனம் அல்லது சோர்வு, தசை வலி, தொண்டை புண் ஆகிய பொதுவான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகள் 2020 ஆம் ஆண்டிலிருந்து இருந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமும் இரண்டு புதிய அறிகுறிகள் காணப்பட்டன. இதில் தூங்குவதில் சிக்கல், கவலை அல்லது பதட்டடம் ஆகிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

JN.1 வகை கொரோனா வேகமாக பரவும் அதே நேரத்தில் நோயெதிர்ப்பு சக்தியை தவிர்த்து எளிதில் பரவுகிறது என்று கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்ற மாறுபாடுகளை விட JN.1 மாறுபாடு வேகமாக பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் மாஸ்க் அணிவது, காற்றோட்டமான அறைகளில் இருப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். மேலும் இணை நோய் உள்ளவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement