Jan 2025 Bank Holidays | ஜனவரி 1ஆம் தேதி வங்கிகள் இயங்குமா..? வாடிக்கையாளர்களே கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!
2025ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு நாளே உள்ளது. இந்நிலையில் தான், வங்கிகளில் இருந்து மீண்டும் ஒரு புதிய விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு, ஜனவரி மாதம் 15 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் பொது, தேசிய மற்றும் பிராந்திய ரீதியாக அனுமதிக்கப்பட்டவை அடங்கும். இவை மாநிலத்திற்கு ஏற்ப வேறுபடலாம். இந்த விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் அனுசரிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்களது வங்கிப் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
ஜனவரி 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை :
ஜனவரி 1 : புத்தாண்டு தினம் (நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது)
ஜனவரி 2 : மன்னம் ஜெயந்தி (அரசு விடுமுறை)
ஜனவரி 5 : ஞாயிறு விடுமுறை (நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது)
ஜனவரி 6 : குரு கோவிந்த் சிங் ஜெயந்தி (ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை)
ஜனவரி 11 : மிஷனரி தினம் மற்றும் இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 12 : சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி
ஜனவரி 13 : லோஹ்ரி
ஜனவரி 14 : மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை (தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் வங்கிகள் மூடப்படும்)
ஜனவரி 15 : திருவள்ளுவர் தினம் மற்றும் துசு பூஜை (தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாமில் வங்கிகள் இயங்காது)
ஜனவரி 16 : உழவர் திருநாள் (தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் விடுமுறை)
ஜனவரி 19 : ஞாயிறு (நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது)
ஜனவரி 22 : இமோயின் (மணிப்பூரில் உள்ள வங்கிகள் Imoin இல் மூடப்பட்டிருக்கும்.)
ஜனவரி 23 : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி (மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், வங்காளம், ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லியில் உள்ள வங்கிகள் மூடப்படும்)
ஜனவரி 25 : நான்காவது சனிக்கிழமை (நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது)
ஜனவரி 26 : குடியரசு தினம் (நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது)
ஜனவரி 30 : சோனம் லோசர் (சிக்கிமில் அனைத்து வங்கிகளும் மூடப்படும்)
வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் பல வகையான வேலைகளை டிஜிட்டல் முறையில் முடித்துக் கொள்ள முடியும். UPI, Mobile Banking அல்லது Internet Banking போன்ற டிஜிட்டல் சேவைகளை எப்போதும் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.