இதை மட்டும் செய்து பாருங்க.. உங்க பழைய பாத்ரூம் புதுசு போல் ஜொலிக்கும்..
வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது என்பது சவாலான ஒன்று. அதிலும் குறிப்பாக பாத்ரூமை சுத்தப்படுத்துவது கடினமான ஒன்று. சுத்தம் செய்வது கடினம் என்று நினைத்து நாம் பாத்ரூமை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், நமது உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். இதனால் நாம் பாத்ரூமை கட்டாயம் சுத்தமாக தான் வைத்திருக்க வேண்டும். பொதுவாக பாத்ரூமை சுத்தம் செய்தாலும், பாத்ரூம் சுவர்களில் அதிகப்படியாக படிந்து காணப்படும் உப்புக் கறையை அகற்றுவது கடினமாக இருக்கும். இதனால் பாத்ரூம் பார்க்கவே அசிங்கமாக இருக்கும்.
ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். பாத்ரூம் டைல்ஸ் புதிது போல் ஜொலிக்க சுலபமான வழி ஒன்று உள்ளது. அந்த சுலபமான வழியை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள். இதற்க்கு முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில், மூன்று டேபிள் ஸ்பூன் கல் உப்பில், பாதி எலுமிச்சை பழத்தின் சாறு, துணி துவைக்க பயன்படும் சோப்பு பொடி, இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க்கி விட வேண்டும். இப்போது இந்த கலவையை பயன்படுத்துவதற்கு முன்பு, கைகளில் க்ளவுஸ் அணிய வேண்டும்.
பின்னர், மிருதுவான ஸ்க்ரப்பர் எடுத்து, ஏற்கனவே தயாரித்து வைத்த கலவை கொண்டு பாத்ரூமை தேய்த்தால், கடினமான உப்புக்கரை சுலபமாக நீங்கி விடும்.