இளைஞர்களுக்கு ஜாக்பாட்..!! ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!! தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
சென்னையில் இன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
முன்னதாக இன்று சென்னையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாடு நடைபெறுகிறது. இதில், ரூ.51,000 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டவுள்ளாா். இதனால், ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும். இது குறித்து தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா கூறுகையில், "2021 முதல் இதுவரை தொழில் துறைக்காக பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் வழியாகவும் முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. இவை அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர குழு அமைத்து கண்காணித்தோம். அதன்படி, ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன. இதற்கான நிகழ்ச்சி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிறுவனங்கள் ரூ.17,616 கோடி முதலீட்டில் ஆலைகளைத் தொடங்கவுள்ளன. இதனால், 65,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோன்று ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளாா். இதனால், ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Read More : நண்பர்களுடன் பார்ட்டி..!! போதையில் தள்ளாடிய மாணவி..!! தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த கொடூரம்..!!