முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

Bonus announced for Tamilnadu ration shop employees on the occasion of Diwali.s
04:18 PM Oct 22, 2024 IST | Chella
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முன்னதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ 16,800 வரை போனஸ் கிடைக்கும். இந்நிலையில் தான், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக ரூ 7 ஆயிரம் வரை போனஸ் பெறுவார்கள். முன்னதாக அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Read More : விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! 30,000 புதிய மின் இணைப்புகள்..!! உங்களுக்கும் கிடைக்கப் போகுது..!! மின்வாரியத்திற்கு பறந்த உத்தரவு..!!

Tags :
தீபாவளி பண்டிகைபோனஸ் அறிவிப்புரேஷன் கடை
Advertisement
Next Article