சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு ஜாக்பாட்!. முதன்முறையாக தீபாவளி போனஸ் அறிவிப்பு!.
Diwali Bonus: சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக புத்தாடைகளை வாங்குவது, குழந்தைகளுக்கு பட்டாசுகள் வாங்குவது, இனிப்புகள் தயார் செய்வது, பலகாரங்கள் தயார் செய்வது என மக்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக் கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு, சனி, ஞாயிறு வார விடுமுறையை சேர்த்து நான்கு நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டது. இதேபோல், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. முன்னதாக அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி,டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல் முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. Non-Executive பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சிஐடியூ – சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: குட்நியூஸ்!. அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு!. இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்!