முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மழைக்காலம்...!! காய்ச்சல், இருமல், சளியால் அடிக்கடி அவதிப்படுறீங்களா..? இந்த கசாயத்தை மட்டும் குடிச்சிப் பாருங்க..!!

You can cure fever and cough with a home-made decoction without going to the hospital.
05:40 AM Dec 05, 2024 IST | Chella
Advertisement

தற்போது மழைக்காலம் நடைபெற்று வரும் நிலையில், நமக்கு அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு மருத்துவமனையை நாடாமல் வீட்டிலேயே தயாரிக்கும் ஒரு கசாயத்தின் மூலம் அந்த பாதிப்புகளை குணப்படுத்தலாம்.

Advertisement

தேவையான பொருட்கள் :

இஞ்சி  - 2 துண்டு

மிளகு  - 1/2  டீஸ்பூன்

மல்லி விதை - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2  டீஸ்பூன்

பனங்கற்கண்டு - தேவையான அளவு

துளசி இலை  -  10

ஓம இலை / கற்பூரவள்ளி இலை - 2

தண்ணீர் - 1 1/2  கப்

செய்முறை:

* இஞ்சியை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

* மிளகு, மல்லி விதை, சீரகம், துளசி இலை, ஓம இலை ஆகியவற்றை இஞ்சியுடன் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

* அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி இடித்து வைத்த விழுதை போட்டு ஒன்றரை கப் தண்ணீர் பாதியாக வற்றியதும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை வடிகட்டிக் கொள்ளலாம்.

* பின்னர், இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வர காய்ச்சல் இருமல் மற்றும் வாயுத் தொல்லை நீங்கும்.

Read More : ”விஜய்யை பாராட்டியே ஆக வேண்டும்”..!! ’அவராவது அதை செய்கிறார்’..!! ஆனால் உதயநிதி..? சீமான் கடும் விமர்சனம்..!!

Tags :
இயற்கை மருத்துவம்இருமல்காய்ச்சல்சளிவீட்டு மருத்துவம்
Advertisement
Next Article