For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Post Office திட்டத்தில் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் எவ்வளவு கிடைக்கும்?

If you invest Rs.5000 per month in Post Office Recurring Deposit Scheme... how much will you get in 5 years?
12:26 PM Dec 12, 2024 IST | Mari Thangam
post office திட்டத்தில் மாதம் ரூ 5000 முதலீடு செய்தால்   5 வருடங்களில் எவ்வளவு கிடைக்கும்
Advertisement

மத்திய மற்றும் மாநில அரசு பல வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக சிறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஏழைகள் ஆகியோர்களுக்கு பயனளிப்பதே இது போன்ற திட்டங்களின் நோக்கமாகும். அஞ்சலகங்கள் வாயிலாக நாம் பல விதமான திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் பயன் பெறலாம். அந்தவகையில் தபால் நிலையத்தில் வழங்கப்படும் இந்த மாதாந்திர சேமிப்பு திட்டமானது அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.

Advertisement

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் : போஸ்ட் ஆபிஸ் RD 5 வருடங்களுக்கான திட்டம். 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் நிறைய சேமிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது, ​​போஸ்ட் ஆபிசில் தொடர் வைப்பு நிதிக் கணக்குக்கான வட்டி விகிதம் 6.7 சதவீதம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2000, ரூ.3000 அல்லது ரூ.5000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

டெபாசிட் செய்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு கிடைக்கும்?

ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் RD ஐத் தொடங்கினால், 5 ஆண்டுகளில் மொத்தம் 3,00,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆபிஸ் ஆர்டி கால்குலேட்டரின் படி, 6.7% வட்டியில் ரூ.56,830 கிடைக்கும். இந்த வழியில், முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகை ரூ..3,56,830 ஆக இருக்கும்.

மாதம் 3,000 ரூபாய் RD ஐ தொடங்கினால், ஒரு வருடத்தில் 36,000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளில் மொத்தம் 1,80,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டி கால்குலேட்டரின் படி, தற்போதைய வட்டி விகிதத்துக்கு ரூ. 34,097 வட்டியாகக் கிடைக்கும். இதன் மூலம் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ. 2,14,097 பெறலாம்.

ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்கு மாதம் 2,000 ரூபாய் RD கணக்கு தொடங்கினால், ஆண்டுக்கு 24,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளில் முதலீடு செய்த அசல் தொகை 1,20,000 ரூபாயாக இருக்கும். இத்துடன் 5 வருடத்துக்கான 6.7% வட்டி ரூ.22,732 சேர்த்து ரூ.1,42,732 முதிர்வுத் தொகையைப் பெறலாம்.

Read more ; அடடே..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! Typist பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

Tags :
Advertisement