”மோதுவது என்று முடிவாகிவிட்டது”..!! ”பார்த்துவிடுவோம் பெரியாரா..? பிரபாகரனா..?” சீமான் பகிரங்க எச்சரிக்கை..!!
நீங்கெல்லாம் 15 வருஷமா எங்க இருந்தீங்க..? பிரபாகரனுடன் நான் இருக்கும் புகைப்படம் பத்திரிகையில் வந்தபோதே சொல்ல வேண்டியது தானே? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தந்தை பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அவருக்கு எதிராக பெரியாரிய இயக்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்தன. அதன்பேடி, பேரணியாக செல்ல முயன்றபோது, அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், பாதுகாப்புக் கருதி சீமான் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”திருமுருகன் காந்தி போன்றோருக்கு என்னுடைய தம்பி, தங்கைகளே பதிலளிப்பார்கள். யார் இந்த சங்ககிரி ராஜ்குமார்..? அவர் ஏன் போட்டோவை வெட்டி ஒட்ட வேண்டும். முதலில் அவர் என்னை பார்த்துள்ளாரா..? என்னிடம் பேசியுள்ளாரா..? அவரை என்கிட்ட கூட்டிட்டு வாங்க. ஏதோ ஒரு ’வெங்காயம்’ன்னு படம் எடுத்தாராம். அதனால தான், வெங்காயங்களுக்கு ஆதரவா பேசிட்டு இருக்காரு. இன்னொருத்தர் நான் எடிட் செய்தேன் என்கிறார். எத்தனை பேருதாண்டா எடிட் பண்ணீங்க.
காமெடி பண்ணிட்டு இருக்காதீங்க. நீங்கெல்லாம் 15 வருஷமா எங்க இருந்தீங்க..? பிரபாகரனுடன் நான் இருக்கும் புகைப்படம் பத்திரிகையில் வந்தபோதே சொல்ல வேண்டியது தானே? பெரியார் மேல் அடி விழுந்ததும் பிரபாகரன் பொய் என கூறி வருகிறார்கள். மோதுவது என்று முடிவாகிவிட்டது. பார்த்துவிடுவோம்.. பெரியாரா? பிரபாகரனா..? என்று. பெரியார் உங்களுக்கு தேவையென்றால், பூஜை அறையில் வைத்து பூஜை பண்ணுங்க. எங்களுக்கு தேவை இல்லை. அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர்” என்று பேசினார்.
Read More : ”நான் பேசியது தப்பு தான்”..!! ”இனி திருந்தி வாழப்போறேன்”..!! வைரலாகும் சவுக்கு சங்கரின் ஆடியோ பதிவு..!!