தமிழகத்தில் இங்கெல்லாம்தான் ஹாட்ஸ்பாட்... தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த கனமழை அலர்ட்!
இரவில் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் மழை பெய்யும். காலையில் மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தினந்தோறும் நீங்கள் தூங்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும். அதிலும் தென் சென்னை கனமழையை பெறும். காற்றழுத்தம் விலகி சென்றது தமிழகத்திற்கு நல்ல செய்தி. அப்போதுதான் தமிழகம் முழுவதும் ஈரப்பதம் பரவும்.
இன்று முதல் நாளை வரை டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்தான் மழை பெய்ய ஹாட்ஸ்பாட். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கமாக இரவு முதல் காலை வரை ஆங்காங்கே காலை வேளையில் மழை பெய்யும். அது போல் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். ஆனால் எல்லா இடங்களிலும் மழை இருக்காது. சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து இப்போதே கவலைப்படுவது தேவையற்று என தெரிவித்துள்ளார்.
Read more ; காலையே வீட்டு வாசலில் நின்ற ED… ஆடிப்போன ஆதவ் அர்ஜுனா..!! பரபரப்பான சென்னை..