For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'கரெப்ஷன் கபடதாரிகள்' ஊழல் வாதிகள் தான் இப்போது நம்மை ஆள்கிறார்கள்..!! - திமுகவை தாக்கி பேசிய விஜய்

It is the corrupt people who are ruining us now..!! - Vijay attacked DMK
05:55 PM Oct 27, 2024 IST | Mari Thangam
 கரெப்ஷன் கபடதாரிகள்  ஊழல் வாதிகள் தான் இப்போது நம்மை ஆள்கிறார்கள்       திமுகவை தாக்கி பேசிய விஜய்
Advertisement

தவெக தலைவர் விஜய் மா நாட்டில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அவர் பேசுகையில், “ஒரு குழந்தை அம்மா என்று சொல்லும்போது சிலிர்ப்பு வருமே.. அந்த குழந்தைக்கு சொல்லத் தெரியாத உணர்வு இருக்குமே.. அதை போல உங்கள் முன் நிற்கிறேன். பாம்பு எனும் அரசியலை கையில் பிடித்து விளையாடுவதுதான் உங்க தளபதி- நடிகர் விஜய்.. அரசியலுக்கு நாம குழந்தைதான்.. பாம்பாக இருந்தாலும் நமக்கு பயமில்லை என்பது கான்பிடெண்ட்.

Advertisement

அவர்கள் இவர்கள் எல்லாம் கிடையாது நாம் என்பது தான் நமது கொள்கை.. என் உயிர் மக்களுக்கே என உரக்க பேசுகையில், உணர்ச்சிவசப்பட்ட தவெக தலைவர், நான் நீ என்பது எல்லாம் இல்லை; நாம் என்பதுதான் நமது கோட்பாடு என கூறினார். தவெக தலைவர் உரக்க பேசுகையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்க போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அண்ணா கூறியபடி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனாலும் பெண் கல்வி பெண்கள் முன்னேற்றம் சமூக சீர்திருத்தம் சமூக நீதி பகுத்தறிவு சிந்தனை, பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம்.

எதிரிகள்தான் நமது வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற கொள்கையை எடுத்தப்பவே யாருடைய எதிரி என்பதை தீர்மானித்துவிட்டோம்; இதை அறிவித்த போதே கதற ஆரம்பிச்சிட்டாங்க.. மக்களை மதம், ஜாதி, பாலினம் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும்தான் எதிரியா? ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்போம்... ஊழல் ஒரு வைரஸ் மாதிரி பழகிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. மதம் பிடிச்ச யானை மாதிரி பிளவுவாத அரசியல் தெரிந்துவிடும்.. அது தன்னையே வெளிப்படுத்திவிடுமோ.. ஊழல் என்பது கண்டுபிடிக்க முடியாது; கருத்தியல் பேசி கொள்கை நாடகமாடும்.. கரெப்ஷன் கபடதாரிகள்தான் நம்மை இப்போ ஆண்டு கொண்டிருக்கின்றனர் என்றார்.

Read more ; நான் அரசியலுக்கு குழந்தை தான்.. ஆனா பாம்பை கண்டு பயம் இல்லாத குழந்தை..!! – தவெக தலைவர் விஜய்

Tags :
Advertisement