இந்தியா பணக்கார நாடாக திகழ சாத்தியமே இல்லை!… ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பகீர் தகவல்!
தற்போதைய நிலையை வைத்து கணிக்கும்போது, மக்கள் தொகையும் அதிகமாமல் இருந்தால் கூட, 2047 வரை இந்தியா குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடாக இருக்கும்; பணக்கார நாடாக சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார்.
ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் 2047ம் ஆண்டுக்குள் மக்கள் தொகை அதிகரிப்பு இல்லாமல் சாத்தியமான வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் 6 சதவீதமாக தொடர்ந்தால், இந்தியா இன்னும் குறைந்த நடுத்தர பொருளாதாரமாக இருக்கும் என்று கூறினார். நாடு வேகமாக வளரவில்லை என்றால், அது பணக்காரர் ஆவதற்குள் (மக்கள்தொகை அடிப்படையில்) முதிர்ச்சியடையும், அதாவது வயதான மக்கள்தொகையின் சுமையை அந்த நேரத்தில் சமாளிக்க வேண்டியிருக்கும். கடந்த இரண்டு காலாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக உள்ளது. பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பங்கெடுப்பை பார்க்கும்போது இது குறைவுதான். அதிலும், பெண்களின் பங்களிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஜி-20 நாடுகளிலேயே இது குறைவாக உள்ளது.
இன்றைய வளர்ச்சியை வைத்து கணக்கிடும்போது, ஆண்டுக்கு 6 சதவீதம் வீதம் பொருளாதாரம் வளர்ந்தால், ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் இரட்டிப்பாவும். எனவே, 24 ஆண்டுகளில், தனிநபர் வருவாய் 4 மடங்கு அதிகமாக இருக்கும். அதாவது, இந்தியாவில் தற்போது தனிநபர் வருவாய் ரூ.2 லட்சத்துக்கும் சற்று குறைவாக உள்ளது. எதிர்காலத்தில் இது ரூ.8 லட்சமாக இருக்கும். தற்போதைய நிலையை வைத்து கணிக்கும்போது, மக்கள் தொகையும் அதிகமாமல் இருந்தால் கூட, 2047 வரை இந்தியா குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடாக இருக்கும்; பணக்கார நாடாக சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.