”அது ஒரு கொடுமையான சட்டம்”..!! ”ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல்”..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!
கோவை மாநகர் சுங்கம் பகுதியில் மறைந்த முன்னாள் எம்பி இரா.மோகன் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் முக.ஸ்டாலினின் அவரது உறவினர்களை சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர் இரா.மோகன் எனவும், சாதாரண பொறுப்பில் இருந்து எம்.எல்.ஏ., எம்பியாக கழகத்திற்கு பணியாற்றியவர் என்றும் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வை பொறுத்தவரை இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுக்கு பிறகு 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கினை தாண்டி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார் என பதிலளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்து பேசி முடிவு செய்வோம். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு, அது ஒரு கொடுமையான சட்டம் எனவும் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நன்றாக பார்க்கிறேன் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலளித்தார்.